‘APEC’ கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தாய்லாந்து சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

‘APEC’ கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று (17/11/2022) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்றுள்ளார்.

11 வயது சிறுவன் மீது மோதிய சிவப்பு நிற கார்! – முகத்தில் ரத்தத்துடன் சாலையில் கிடந்த பரிதாபம்;கூச்சலிட்ட சிறுவனுக்கு கிடைத்த உதவி!

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நவம்பர் 17- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prime Minister of Thailand Prayut Chan-o-cha) தலைமையில் நடைபெறும் 29-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asia-Pacific Economic Cooperation- ‘APEC’) பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் (Economic Leaders’ Meeting- ‘AELM’) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொள்கிறார்.

கூட்டத்தில் தலைவர்கள் உலக பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கவுள்ளனர். அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ‘APEC’ நாடுகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நெதர்லாந்து, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி உயர்வு!

சிங்கப்பூர் பிரதமருடன், பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் தாய்லாந்து சென்றுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.