கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தார் சிங்கப்பூர் பிரதமர்!

Pm lee leave speech
Pic: MCI/Fyrol

 

 

நடப்பு மே மாத தொடக்கத்தில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் லீ சியன் லூங், தொடர்ந்து மே 14, 15, 16 ஆகிய தேதிகளில் தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனுக்கும், மே 17, 18, 19 ஆகிய தேதிகளில் கென்யா நாட்டின் தலைநகர் நைரோபிக்கும் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

காதலியை தாக்கிய இந்திய வம்சாவளி ஆடவர் – சிறை விதித்து கோர்ட் தீர்ப்பு

பின்னர், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நாடு திரும்பிய நிலையில், மே 22- ஆம் தேதி அன்று அவருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், “மருத்துவர்களின் அறிவுரைப்படி, என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். மேலும், மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்துக் கொண்டேன். கடந்த நவம்பர் மாதம் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். எனவே, பொதுமக்கள் கொரோனாவுக்கான பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பிரதமர் லீக்கு கொரோனா நோய்த்தொற்றால் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள், சிங்கப்பூர் பிரதமர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வந்து மக்கள் சேவைகளைத் தொடர்ந்து செய்ய வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

கொள்கலன் விழுந்து மரணித்த ஊழியர் – விபத்துக்கு வெளிநாட்டு ஊழியர் தான் காரணம்.. குற்றம் சாட்டும் அதிகாரி

இந்த நிலையில், பிரதமர் லீ சியன் லூங் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். மேலும், மே 29- ஆம் தேதி முதல் அவர் வழக்கம் போல் பணிக்கு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர், வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.