கொள்கலன் விழுந்து மரணித்த ஊழியர் – விபத்துக்கு வெளிநாட்டு ஊழியர் தான் காரணம்.. குற்றம் சாட்டும் அதிகாரி

worker death 2-tonne container safety procedures not followed
Stomp

சரக்கு கொள்கலன் மேலே விழுந்து ஊழியர் ஒருவர் நசுங்கி உயிரிழந்ததற்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இரண்டு டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட அந்த கொள்கலன் ஊழியர் ஒருவர் மீது விழுந்து அவர் மரணித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

விடுதி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நற்செய்தி: கிராஞ்சி விடுதிக்கு வரும் வசதி.. அனைத்தும் ஒரே இடத்தில்

அவர் தரக் கட்டுப்பாட்டு ஊழியராக பணிபுரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. கொள்கலனை நகர்த்திய ஆபரேட்டர் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றத் தவறியதாக விசாரணை அதிகாரி கண்டறிந்துள்ளார்.

திரு தியோ செர் கியோ என்ற ஊழியரின் மரணம் குறித்த தனது அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பயோனியர் கிரசண்டில் உள்ள டிப்போவில் கொள்கலனை இறக்கும் பணியின்போது திரு ஆறுமுகம் கணேசன் என்ற ஊழியர் ஸ்டேக்கர் வாகனத்தை ஓட்டியதாக மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா கூறினார்.

கட்டுமான தளத்தில் கொள்கலன் மேலே விழுந்ததில் ஊழியர் உடல் நசுங்கி மரணம்

அதிகாரி மேலும் கூறியதாவது: “தியோ… கொள்கலனை வைக்க நினைத்த இடத்தில் திரு தியோ நிற்பதை ஆறுமுகம் கவனிக்க தவறிவிட்டார், அதன் விளைவாக, கொள்கலன் திரு தியோ மீது இறக்கப்பட்டது.”

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கத் தவறியதே இந்த விபத்துக்கான முதன்மை காரணம் என்று தாம் கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரில் 40°C போல பொளக்கும் வெயில்… கடும் இன்னலுக்கு ஆளாகும் ஊழியர்கள்