கட்டுமான தளத்தில் கொள்கலன் மேலே விழுந்ததில் ஊழியர் உடல் நசுங்கி மரணம்

worksite death
Photo: Stomp

15 Pioneer Crescentல் உள்ள வேலையிடத்தில் வெள்ளிக்கிழமை காலை (அக். 1) 49 வயதான ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக முன்னர் செய்தியில் குறிப்பிட்டோம்.

அந்த 49 வயதான ஊழியர், கட்டுமான தளத்தில் 20 அடி கொள்கலனை ஏற்றி இறக்கும்போது அது மேலே விழுந்ததில் நசுங்கி உயிரிழந்தார் என்று மனிதவள அமைச்சக செய்தித் தொடர்பாளர் திங்களன்று தெரிவித்தார்.

முழு கண்காணிப்பில் ஏழு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள்

வெள்ளிக்கிழமை காலை 8.59 மணியளவில் உதவி வேண்டி காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.

மரணத்தை ஏற்படுத்திய இந்த மோசமான செயலுக்காக 42 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார், விசாரணைகள் நடந்து வருவதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த அந்த ஊழியர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டதாக MOM செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அலையட் கண்டெய்னர் சர்வீசஸ் (Allied Container Services) யார்ட் 8ல் இந்த சம்பவம் நடந்தது.

இதையும் சேர்த்து, இந்த ஆண்டு மொத்த வேலையிட இறப்புகளின் எண்ணிக்கை 30ஆக உள்ளது.

S Pass மற்றும் work permit உடைய வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர மீண்டும் அனுமதி