S Pass மற்றும் work permit உடைய வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் வர மீண்டும் அனுமதி

Roslan Rahman/AFP

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்களுக்கான நுழைவு அனுமதிகளை மனிதவள அமைச்சகம் (MOM) மீண்டும் தொடங்க உள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறை துறைகளில் பணிபுரியும் “S Pass மற்றும் work permit” அனுமதி உடைய ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அது கூறியுள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம்

இந்த அனுமதி, அதிக ஆபத்து உள்ள நாடுகள்/பிராந்தியங்களிலிருந்து சிங்கப்பூருக்குள் வருபவர்களுக்கும் பொருந்தும் என MOM கூறியுள்ளது.

இந்த நுழைவு ஒப்புதலுக்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 15 முதல் தொடங்கும்.

ஆனால் இந்த ஊழியர்கள் வருவதற்கு முன்பு முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் மற்றும் உலகளாவிய கோவிட் -19 சூழலை கருத்தில் கொண்டு நுழைவு ஒப்புதல்கள் வரம்புக்குள் இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Pass வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று சுகாதர அமைச்சகம் கூறியுள்ளது.

COVID – 19 தளர்வு: தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி Antigen பரிசோதனைகள் மட்டுமே!