COVID – 19 தளர்வு: தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி Antigen பரிசோதனைகள் மட்டுமே!

Antigen rapid tests migrant workers
Antigen rapid tests (PHOTO: MOM)

தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழக்கமாக மேற்கொள்ளும் பரிசோதனைகளில், கூடிய விரைவில் ஆன்டிஜென் பரிசோதனைக்கு கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்படும்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதிகளில் கிருமித்தொற்றுக்கான மீள்திறன் மேம்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கு இடையிலான பணிக்குழு இதனை தெரிவித்தது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகே, வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி!

இனிமேல் பாதிக்கப்பட்டவருடன் ஒரே அறையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தும் உத்தரவுகள் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

இவ்வாறு தனிமைப்படுத்த படுபவர்களின், தனிமைக்கான நாட்கள் 14லிருந்து 10 நாட்களுக்கு குறைக்கப்படும். 3வது நாளில் அவர்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அப்போது அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லையெனில் அவர்கள் குணமடைய அமைக்கப்பட்ட இடத்திலிருந்து வெளியேறலாம்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இல்லையெனில் அவர்கள் விடுதிகளில் அமைக்கப்படும் தனி இடங்களிலேயே தங்கி குணமடைய அனுமதிக்கப்படுவார்கள்.

தங்குவிடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 90 % விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதை பணிக்குழு குறிப்பிட்டுள்ளது.

வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சிங்கப்பூர் அரசு!