முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகே, வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி!

Photo: Lonely Planet

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான அனுமதி வைத்திருப்பவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளும் போட்டுக்கொண்ட பிறகே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

அமைச்சுகளுக்கு இடையிலான நடந்த பணிக்குழுவின் கலந்துரையாடலில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. இது அடுத்த மாதம் 1ம் தேதியிலிருந்து நடைமுறைபடுத்தப்படும் என்றும் தெரிவித்தது.

வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்த சிங்கப்பூர் அரசு!

வருகின்ற 15 ம் தேதியிலிருந்து முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

உலக நாடுகளின் COVID – 19 நிலவரத்தைப் பொருத்தே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கான கால அவகாசம் 3 முதல் 6 மாதம் வரை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

18 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய, இந்த விதி பொருந்தாது என்றும் தெரிவித்தது.

குடும்ப உறுப்பினர்கள் மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய பதிவு செய்பவர்களும், மாணவர்களுக்கான அனுமதி வைத்திருப்பவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அவசியம்.

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூரர்கள்!