சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் மாற்றம்

Photo: Changi Airport

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் தற்போது 14 நாட்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும், இது 10 நாட்களாக குறைக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

COVID – 19 தளர்வு: தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி Antigen பரிசோதனைகள் மட்டுமே!

“III மற்றும் IV ” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தும்.

இது அக்டோபர் 6ம் தேதி இரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வரும்.

அத்தகைய பயணிகளுக்கு வருகையின்போதும் மற்றும் 10வது நாளிலும் PCR சோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் அவர்கள் மூன்று மற்றும் ஏழாம் நாட்களில் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) மேற்கொள்ளவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட தனிமை வசதிகளில் 10 நாள் தங்குவதற்கு S$1,450 செலவாகும், தற்போது 14 நாள் தங்குவதற்கு S$2,000 செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகே, வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு சிங்கப்பூருக்குள் அனுமதி!