மீண்டும் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிஷிடா ஃபுமியோவுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

ஜப்பானில் நடந்து முடிந்த கீழ் அவை தேர்தலில் (Lower House Elections) ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (Liberal Democratic Party of Japan’s) அபார வெற்றி பெற்றது. இதனால் ஜப்பான் நாட்டு பிரதமராக கிஷிடா ஃபுமியோ (Japanese Prime Minister Kishida Fumio) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (22/11/2021) மதியம் ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு!

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜப்பானிய பிரதம மந்திரி கிஷிடா ஃபுமியோவிடம் இன்று (22/11/2021) பிற்பகல் ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சமீபத்திய கீழ் அவை தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கும், அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டேன். கிஷிடா வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் பல ஆண்டுகளாக நாங்கள் பலமுறை சந்தித்திருக்கிறோம்.

சிங்கப்பூரும், ஜப்பானும் இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 55- வது ஆண்டு (Singapore and Japan commemorate the 55th anniversary of diplomatic relations) நிறைவைக் கொண்டாடுகின்றன. பயணத்தின் பாதுகாப்பான மறுதொடக்கம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் உட்பட நாம் ஒன்றாகச் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன.

ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

அழைப்பின் போது, ​​பிரதமர் கிஷிடாவின் டிஜிட்டல் கார்டன் சிட்டி நேஷன் விஷன் (Digital Garden City Nation Vision) பற்றியும் பேசினோம், மேலும் எங்களின் ஸ்மார்ட் நேஷன் சிங்கப்பூர் (Smart Nation Singapore) முயற்சியின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பலதரப்பு வர்த்தக அமைப்பு மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை ஆதரிக்கும் ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகள். டிரான்ஸ்- பசிபிக் பார்ட்னர்ஷிப்பிற்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தம் (Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership -‘CPTPP’) மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (Regional Comprehensive Economic Partnership- ‘RCEP’) ஆகியவற்றில் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். பிரதமர் கிஷிடாவின் தலைமையின் கீழ் எங்களது ஒத்துழைப்பு வளரும் என்று நான் நம்புகிறேன்”. இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.