கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை 200,000ஆக உயர்த்த சிங்கப்பூர் முடிவு

Google Maps

சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள், தீவு முழுவதும் உள்ள காவல் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை 90,000லிருந்து குறைந்தது 200,000ஆக உயர்த்த உள்ளது.

நேற்று (ஆக. 3) நடந்த நாடாளுமன்ற உரையின்போது உள்துறை அமைச்சர் கே சண்முகம், இந்த கேமராக்கள் குற்றங்களை கண்டறியவும், தடுக்கவும், அதனை தீர்க்கவும் உதவும் என்றும் கூறினார்.

லாரிகளில் போதிய வசதி இல்லாமல் ஊழியர்களை ஏற்றிச் சென்ற 23 குற்றவாளிகள் பிடிபட்டனர்

இந்த கேமராக்கள் நிலையான மற்றும் எப்போதும் இருக்கும் சாட்சி, அதனை சந்தேகிக்கமுடியாது. இது உண்மையில் ஒரு கருப்பு-வெள்ளை சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

கண்காணிப்பு கேமராக்கள் மக்களின் தனியுரிமையில் உட்புகுவதாக விமர்சனம் எழுவதாக கூறிய அவர், பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான மற்றும் அச்சம் இல்லாத சூழலில் வாழ விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் வாழும் சுற்றுப்புறங்களில் கேமராக்கள் வைக்கப்படும்போது, அதனை மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன எனவும் திரு சண்முகம் கூறினார்.

2012ஆம் ஆண்டு முதல் 90,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், பொது இடங்களான ஹவுசிங் எஸ்டேட், அக்கம்பக்க நிலையங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ளன.