சிங்கப்பூரில் அதிரடி சோதனை: தகாத சேவை வழங்கிய பெண்கள், சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் கைது

SINGAPORE POLICE raid-massage-outlets

சிங்கப்பூரில் நடந்த அதிரடி சோதனை நடவடிக்கையில் 62 பேர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

பலேஸ்டியர் சாலை, ஆர்ச்சர்ட் சாலை, தாம்சன் சாலை மற்றும் ரிவர் வேலி சாலை ஆகிய இடங்களில் அமைந்துள்ள பல்வேறு மசாஜ் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

கட்டுமான தளத்தில் வாகனம் மோதி வெளிநாட்டு ஊழியர் மரணம் – தரையில் குந்தியிருந்தவருக்கு நேர்ந்த சோகம்

கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை நான்கு நாள் நடந்த இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 14 ஆண்கள் மற்றும் 48 பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் 21 முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது..

இதில் பெண்கள் தொடர்பான குற்றச் சட்டத்தின்கீழ், 23 மற்றும் 46 வயதுக்கும் இடைப்பட்ட 22 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

பாலியல் சேவைகளை வழங்கியது, வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் (EFMA) கீழ் குற்றங்கள் செய்தது மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட சந்தேக குற்றச் செயல்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்தால் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு அதிக சம்பளம்.. ஜூலை முதல்