பொங்கல் விழா: களைகட்டியது இந்திய மரபுடைமை நிலையம்!

Photo: Indian Heritage Centre official facebook page

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பொங்கல் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடைகளை அணிந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை!

குறிப்பாக, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கம் என்றழைக்கப்படும் ‘Lisha’, ஆண்டுதோறும் பொங்கல் விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இன்று (08/01/2022) மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் பொங்கல் விழாவுக்கான ஒளியூட்டு தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதனால், லிட்டில் இந்தியா முழுவதும் இன்று முதல் பிப்ரவரி மாதம் வரை இரவில் வண்ணவிளக்குகளில் ஜொலிக்கும். அதேபோல், பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகளுக்கு ‘Lisha’ ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள இந்திய மரபுடைமை நிலையமும், ஆண்டுதோறும் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இன்று (08/01/2022) முதல் ஜனவரி 16- ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள், பொங்கல் விழா குறித்து சிறுவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டு- அஞ்சல் தலைகளை வெளியிட்ட சிங்கப்பூர் அஞ்சல் துறை!

‘Campbell Lane’- ல் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் (Indian Heritage Centre) தலைமை அலுவலகத்தில் நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடைபெறுகின்றன. பொங்கல் விழா குறித்த கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பொங்கல் பானை, கரும்பு, உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டு காட்சி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழர்கள் மட்டுமின்றி சிங்கப்பூரர்களும் இங்கு வந்து பார்வையிட்டு, புகைப்படத்தை எடுத்து மகிழ்கின்றனர். கோமளா விலாஸ் (Komala Vilas) என்ற பண்ணை திறக்கப்பட்டு காட்சிக்காக மாடுகளும் வரவழைக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் ஓவிய பயிலரங்கு (Tanjore Art Workshop), மண்டேலா புள்ளி ஓவிய பயிலரங்கு (Mandala Dot Painting Workshop) உள்ளிட்டவை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்கலாம். எனினும், அவர்கள் இந்திய மரபுடைமை நிலையத்தின் இணைய பக்கத்தில் முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள், இணையவழி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://www.indianheritage.gov.sg/en என்ற இணையதள பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை கார், மற்றொரு காரில் மோதி விபத்து (வீடியோ): கார் தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுநர் மரணம்

பொங்கல் விழாவையொட்டி, இந்திய மரபுடைமை நிலையம் களைகட்டியது என்றால் மிகையாகாது!