“Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ இத செய்” – பேஸ்புக்கில் வந்த விளம்பரம்… சுதாரித்த நபர்

singapore-pools-employee-posts-ad--sure-win-jackpot-number
SHIN MIN DAILY NEWS

Singapore Pools குலுக்கலில் முதல் பரிசு வேணுமா? அப்போ நா கேக்குற அமவுண்ட்ட கொடு, என்று கூறி ஊழியர் போல ஒருவர் மோசடி செய்துள்ளார்.

முதல் பரிசு வெற்றி பெற வேண்டும் என்றால் எனக்கு S$1,350 பணம் கொடுக்க வேண்டும் என்று அவர் Facebook வழியாக விளம்பரம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி அச்சம் வேண்டாம் – “தைரியமாக செய்யுங்கள்.. உயிரை காப்பற்றுங்கள்” – ரகசியம் காக்கப்படும் என உறுதி

பணம் செலுத்துபவர்கள் 4D ஜாக்பாட் குலுக்கலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும், தாம் ஒரு Singapore Pools ஊழியர் என்றும் அவர் போலி விளம்பரம் செய்துள்ளார்.

கடந்த ஜூன் 19 அன்று ஃபேஸ்புக்கில் இந்த விளம்பரத்தைப் பார்த்ததாக திரு ஹு என்று சொல்லப்படும் 53 வயதான ஆடவர் ஒருவர் ஷின் மின் டெய்லி நியூஸிடம் கூறினார்.

அந்த விளம்பரம் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது, இதனால் மேலும் விவரங்கள் அறிய விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள கணக்கிற்கு அவர் செய்தி அனுப்பினார்.

அப்போது தாம் ஒரு சிங்கப்பூர் பூல்ஸ் ஊழியர் எனக் கூறி, முதல் பரிசை வெல்ல S$1,350 செலுத்த வேண்டும்; இரண்டாம் பரிசுக்கு S$850 மற்றும் மூன்றாம் பரிசுக்கு S$350 வழங்க வேண்டும் என மோசடி நபர் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட திரு ஹு இது மோசடி என்பதை உணர்ந்து போலீசிடம் புகார் அளித்தார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

கட்டுமான தளத்தில் விபத்து: கம்பியின் பகுதி, தொங்குமேடை இடிந்து விழுந்தது.. ஊழியருக்கு காயம்