சிங்கப்பூரில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசு: Singapore Pools லாட்டரி கடைகளில் நீண்ட வரிசை!

jan10-toto-cover
Mothership Reader

Singapore Pools லாட்டரி கடைகளில் நேற்றும், இன்று திங்கட்கிழமையும் (ஜனவரி 10) வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசைகள் காணப்பட்டனர்.

இதில் S$8.6 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகையை வெல்லும் நம்பிக்கையில் போட்டிபோட்டுக்கொண்டு அவர்கள் காத்திருந்தனர்.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமை புத்தாண்டு S$5 மில்லியன் டிராவில் வெற்றியாளர்கள் யாரும் இல்லாததால், Toto-வின் முதன்மைப் பரிசு S$8.6 மில்லியனாக உயர்ந்துள்ளது.

இன்று திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில் பரிசுக்கான டிரா நடைபெற்றது.

ஹௌகாங் அவென்யூ 3 மற்றும் ஸ்ட்ரீட் 61இல் அமைந்துள்ள Fatt Chye Heng Trading மற்றும் Tong Aik Huat ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பார்வையிட்டது.

இரண்டு கடைகளிலும் மதிய உணவு நேரத்தில் 30 முதல் 80 பேர் வரை வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்கள் 15 முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருந்தாகவும் அது கூறியுள்ளது.

Tong Aik Huat கடையில், 42 வயதான திரு சிங்கம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு கட்டுமான ஊழியர், அதில் பங்குகொள்ள வந்ததாக கூறினார்.

இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”