சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள்: நேரில் சென்று காண அனுமதி..ஆனால் இது முக்கியம்.!

Singapore premier League football
Pic: Singapore Premier League

சிங்கப்பூர் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் (Singapore Premiere League Football) கடந்த இரண்டு மாதங்களாக COVID-19 பரவல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது இந்த மாதம் மீண்டும் துவங்க உள்ள பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளை காண 250 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

COVID-19 விதிமீறல்: 10 மசாஜ் பார்லர்களை மூட உத்தரவு..வாடிக்கையாளர்களுக்கும் அபராதம்.!

ஆனால், கால்பந்து போட்டிகளை நேரில் காண விரும்பும் பார்வையாளர்கள் தேசியத் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், முழுமையாகத் தடுப்பூசி போட்டு முடித்து குறைந்தது 14 நாட்கள் ஆகி இருக்க வேண்டும், அல்லது கிருமித்தொற்று இல்லை என பரிசோதனை முடிவை அவர்கள் காட்ட வேண்டும்.

இல்லையெனில், பார்வையாளர்கள் விளையாட்டு அரங்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கிருமித்தொற்று கட்டுப்பாடுகளால், கடந்த 2 மாதங்களாக பார்வையாளர்கள் இல்லாமல் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தது.

கொரோனா பெருந்தொற்று: ஆன்லைன் வணிகத்துக்கு மாறி வரும் நிறுவனங்கள்!