“இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை”- தர்மன் சண்முகரத்னம் பேச்சு!

"இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை"- தர்மன் சண்முகரத்னம் பேச்சு!
Photo: Tharman Shanmugaratnam

 

 

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

வேன் மோதி விபத்து: வாகனத்தில் சிக்கிய மூவரை காப்பற்றிய 20-க்கும் மேற்பட்ட நபர்கள்

சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா யாக்கோபின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபரைத் தேர்வுச் செய்வதற்காக நடந்த பொதுத்தேர்தலில், இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70.4% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

வெற்றிக்கு பிறகு பேசிய தர்மன் சண்முகரத்னம், “இவ்வளவு பெரிய வெற்றியை தான் எதிர்பார்க்கவில்லை. இது அரசியல் தேர்தல் அல்ல என்பதை உணர்ந்து, அனைத்து தரப்பு மக்களும் அறிவுப்பூர்வமாக வாக்களித்துள்ளனர். தன் மீது நம்பிக்கை வைத்து கட்சி சார்பற்ற நபராகத் தன்னை தேர்வு செய்தது; ஊக்கமளித்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

“இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒன்றுமையை மேலும் வலுப்படுத்த விருப்பம்” – திரு. தர்மனுக்கு மனமார்ந்த வாழ்த்து கூறிய இந்திய பிரதமர் மோடி

சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள தர்மன் சண்முகரத்னத்தின் மனைவி, ஜப்பான்- சீனா வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு மாயா என்ற மகளும், அகிலன், அரண், அறிவன் என்ற மூன்று மகன்களும் உள்ளன.