சிங்கப்பூர் அதிபர் தேர்தல்- வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்- வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!
TODAY File Photo

 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதால், சிங்கப்பூர் தேர்தல் துறை, அதிபர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள ரோபோக்கள்!

அந்த வகையில், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ள சிங்கப்பூர் தேர்தல் துறை (Elections Department Singapore), பொதுமக்கள் இன்று (ஜூன் 15) முதல் வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தேர்தல் துறையின் இணையதளப் பக்கத்திலோ (அல்லது) நேரிலோ சென்றுப் பார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் தேர்தல் துறையின் என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் சிங்கப்பூரர் சுட்டுக் கொலை…..காவல்துறை தீவிர விசாரணை!

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் இனி தபால் மூலம் வாக்களிக்கலாம். இதற்காக, அவர்கள் சிங்கப்பூர் தேர்தல் துறையில் பதிவுச் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத தகுதியான வெளிநாடுவாழ் சிங்கப்பூரர்கள் https://www.eld.gov.sg/ என்ற இணையதளப் பக்கத்திற்கு பதிவு செய்துக் கொள்ளலாம். அத்துடன், குடியிருப்பு முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களில் தவறு இருப்பின் திருத்தங்களை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 100% வாக்குகள் பதிவாகும் வகையில், அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது தேர்தல் துறை.