கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் அதிபர் ஹலிமா யாக்கோப்!

Photo: Singapore President Halimah Yacob Official Facebook Page

 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் ஐந்து நாள் அரசுமுறைச் சுற்றுப்பயணமாக, நாளை (மே 21) மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுட்டெரிக்கும் வெயில்.. இலவசமாக பீர் வழங்கும் நிறுவனம்… இரவில் அன்லிமிடெட் பீர் – குவியும் மக்கள்

சிங்கப்பூர் மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் தூதரக உறவுகளின் 30- வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவின் (President Kassym Jomart Tokayev) அழைப்பின் பேரில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் அந்நாட்டு செல்கிறார் என்று தெரிவித்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம், கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அஸ்தானாவில் (Astana) உள்ள அகோர்டா அரண்மனைக்கு (Akorda Palace) செல்கிறார்.

அங்கு அவருக்கு அந்நாட்டு அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு கஜகஸ்தான் அதிபர் வழங்கும் மதிய விருந்தில் பங்கேற்கும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், கஜகஸ்தான் பிரதமர் அலிகான் ஸ்மைலோவ் (Kazakhstan Prime Minister Alikhan Smailov) அளிக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்கிறார்.

கஜகஸ்தானில் தொழிலதிபர்கள், தலைவர்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் அதிபர், சிங்கப்பூர்- கஜகஸ்தான் வர்த்தக கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். கடந்த 2017- ஆம் ஆண்டுக்கு பிறகு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், கஜகஸ்தான் செல்கிறார்.

தென்கிழக்கு ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு…. பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருக்கு எத்தனையாவது இடம்?

கடந்த ஜனவரி மாதம், உஸ்பெகிஸ்தான் அதிபர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, சிங்கப்பூர் அதிபரை உஸ்பெகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் அடிப்படையில், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், உஸ்பெகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

நடப்பாண்டு சிங்கப்பூர்- உஸ்பெகிஸ்தான் நாடுகளின் தூதர உறவுகளின் 25-வது ஆண்டாகும். அதனை நினைவுக்கூறும் வகையில் சிங்கப்பூர் அதிபரின் பயணம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் மே 25- ஆம் தேதி அன்று மாலை சிங்கப்பூருக்கு திரும்புகிறார் அதிபர் ஹலிமா யாக்கோப்.