பாங்காக்கில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு!

Photo: Prime Minister Of Singapore Official Twitter Page

நவம்பர் 17- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prime Minister of Thailand Prayut Chan-o-cha) தலைமையில் நடைபெறும் 29-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (Asia-Pacific Economic Cooperation- ‘APEC’) பொருளாதார தலைவர்கள் கூட்டத்தில் (Economic Leaders’ Meeting- ‘AELM’) சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கலந்துக் கொள்கிறார்.

‘APEC’ கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக தாய்லாந்து சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

இதற்காக, தாய்லாந்து சென்றுள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு நேற்று (17/11/2022) மாலை பாங்காக்கில் நடைபெற்றது. அத்துடன், இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

Photo: Prime Minister Of Singapore Official Twitter Page

இதில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ மற்றும் இரு நாட்டு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது, பொருளாதாரம், முதலீடு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் கூறுகின்றன.

நெதர்லாந்து, பிரேசில், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி உயர்வு!

இந்த சந்திப்பு குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சீன அதிபர் ஜி ஜின்பிங்-கை சந்தித்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாங்கள் கடைசியாக தொலைபேசியில் பேசினோம். 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு இது எங்கள் முதல் நேரடி சந்திப்பு” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.