சவுதி இளவரசரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் நேற்று (08/02/2022) தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.

மீண்டும் FairPrice விலை லேபிளில் குளறுபடி: விலை லேபிளில் 296கி.. உண்மை எடை 176கி – வைரலான வீடியோ

இது குறித்து சிங்கப்பூர் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் (Saudi Crown Prince Mohammad Bin Salman) 08/02/2022 அன்று தொலைபேசியில் பேசினேன். நமது நாடுகள் இந்த ஆண்டு இராஜதந்திர உறவுகளின் 45 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன. மேலும் சவுதி- சிங்கப்பூர் கூட்டுக் குழு மூலம் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட உறவுகளை ஆழமாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம்.

சவுதி அரேபியாவின் (Saudi Arabia) முன்னேற்றங்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சர்வதேச யாத்ரீகர்களுக்கு ஹஜ் பயணம் மீண்டும் தொடங்கும் போது நமது ஹஜ் ஒதுக்கீட்டை (Haj quota) அதிகரிக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் கோரிக்கை சாதகமாக பரிசீலிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பிப்ரவரி 15- ஆம் தேதி தொடங்குகிறது சிங்கப்பூர் விமானக் கண்காட்சி!

சூழ்நிலை அனுமதிக்கும் போது மீண்டும் இளவரசர் முகமதுவை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.