பாயிண்ட்-டு-பாயிண்ட் போக்குவரத்து சேவைகளில் பயணிகளுக்கு அதிக திருப்தி..!

Commuters more satisfied with point-to-point transport services
Commuters more satisfied with point-to-point transport services in 2019: Survey

சிங்கப்பூரில் கடந்த 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2019ல் பாயிண்ட்-டு-பாயிண்ட் (P2P) சேவைகளில் வாடிக்கையாளர்கள் அதிக திருப்தி அடைந்தனர் என்று திங்கள்கிழமை (பிப்ரவரி 24) அறிவிக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து கவுன்சில் நியமித்த கணக்கெடுப்பின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வருடாந்திர பாயிண்ட்-டு-பாயிண்ட் போக்குவரத்து சேவைகள் வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில், P2P சேவைகள் சராசரி திருப்தி மதிப்பெண் 8.1-ஐப் பெற்றுள்ளன. இது கடந்த 2018ல் 7.9ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID – 19 கொரோனா வைரஸ்; சிங்கப்பூர் உள்ளிட்ட உலகநாடுகளின் அண்மை நிலவரம்..!

கூடுதலாக தனியார் வாடகை கார் (PHC) சேவைக்கான மதிப்பெண் 7.9ல் இருந்து 9.2 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக, டாக்ஸி மற்றும் பி.எச்.சி சேவைகளுக்கான மதிப்பெண் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

டாக்சி, தனியார் வாடகைக்கார் சேவை ஆகியவற்றைப் பயன்படுத்தும் சுமார் 1,503 பேர் இந்த கருத்தாய்வில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : COVID-19 – டாக்ஸி ஓட்டுநர் உட்பட மேலும் 2 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!