COVID-19 – டாக்ஸி ஓட்டுநர் உட்பட மேலும் 2 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்..!

Covid-19 Singapore
No new COVID-19 cases in Singapore; 2 more patients discharged, including taxi driver

சிங்கப்பூரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) மதியம் வரை புதிய COVID-19 சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தற்போது வரை வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 89ஆக உள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; சீனாவிற்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியுள்ள சிங்கப்பூர்..!

கடந்த பிப்ரவரி 3ஆம் தேதிக்குப் பிறகு, சிங்கப்பூரில் புதிய COVID -19 சம்பவங்கள் எதுவும் பதிவாகாதது இதுவே முதல் முறை.

ஒரு டாக்ஸி டிரைவர் உட்பட மேலும் இரண்டு COVID-19 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் மொத்தம், 51 பேர் தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்னும் மருத்துவமனையில் 38 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பெரும்பாலானவை சீராகவும் அல்லது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும், மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!