சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!

foreign workers
Singaporean foreign workers

சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழிலாளர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்ததற்காக 33 வயதான சிங்கப்பூரர் மீது வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்டுமானத் துறையில் நான்கு தனித்தனி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அனுமதி அட்டை பெற்றதாக சுமார் 139 குற்றச்சாட்டுகளை ஜெங் ஹோங்டெங் என்பவர் எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 10 COVID-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 1 புதிய நபர் உறுதி..!

ஆனால் அவர்களை யாவரையும் இவர் பணியில் அமர்த்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பு, தொழிலாளர்கள் தங்கள் சொந்த வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த குற்றங்கள் ஏப்ரல் 2013 முதல் நவம்பர் 2015 வரை நடைபெற்றதாக CNA குறிப்பிட்டுள்ளது.

கூடுதலாக, “ஒரு தனிப்பட்ட நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட தனது ஊழியர்களின் சம்பளத்தை செலுத்தத் தவறிய மற்றொரு ஐந்து குற்றச்சாட்டுகளை ஜெங் எதிர்கொள்கிறார்,” என்று MOM குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு வரும் மார்ச் 12ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்படும்.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் முதலாளிகள் என்ன செய்யவேண்டும்?

தண்டனை

  • அதில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜெங்கிற்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
  • மேலும் S$6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
  • அதே விசாரணையில் குறைந்தது ஆறு வழக்குகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பிரம்படியும் விதிக்கப்படலாம் என்றும் CNA குறிப்பிட்டுள்ளது.