சிங்கப்பூரில் மேலும் 10 COVID-19 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 1 புதிய நபர் உறுதி..!

10 more COVID-19 patients discharged
10 more COVID-19 patients discharged, 1 new confirmed case: MOH

சிங்கப்பூரில் மேலும் பத்து COVID-19 தொற்று பாதித்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) வீடு திரும்பினர்.

இதில் ஒரு DBS ஊழியர் மற்றும் ‘கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்’ தேவாலயத்துடன் தொடர்புடைய பலர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தினசரி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : மகாசிவராத்திரி; சிங்கப்பூரில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு காணொளி..!

மேலும் சிங்கப்பூர் COVID-19 பாதிக்கப்பட்ட ஒரு புதிய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்தை பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 86ஆக உள்ளது.

நாற்பத்தேழு பேர் தற்போது வரை இந்த வைரஸிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று CNA குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ் (COVID-19): வேலையிடத்தில் முதலாளிகள் என்ன செய்யவேண்டும்?

சமீபத்திய சம்பவம்:

சமீபத்திய உறுதிப்படுத்தப்பட்ட சம்பவம், சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயதான சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக மாணவர் ஆவார். இவர் சமீபத்தில் சீனா செல்லவில்லை.

மேலும் 82 சம்பவமாக பதிவுசெய்யப்பட்ட, 57 வயதான சிங்கப்பூர் பெண்ணுடன் இவருக்கு தொடர்பு உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் புக்கிட் படோக் ஈஸ்ட் அவென்யூ 5ல் வசிக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.