கொரோனா வைரஸ்; சீனாவிற்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியுள்ள சிங்கப்பூர்..!

Mindef sends 2,000kg of medical supplies to China
Coronavirus: Mindef sends 2,000kg of medical supplies to China to help with relief efforts (PHOTO: NG ENG HEN/Facebook)

சீன இராணுவ மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க சுமார் 2,000 கிலோவிற்கு மேற்பட்ட மருத்துவ பொருட்களை குடியரசின் பாதுகாப்பு அமைச்சகம் (Mindef) வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தனது முகநூல் பக்கத்தில் இந்த பொருட்களின் படங்களை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அன்று வெளியிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் COVID-19 பாதிக்கப்பட்ட 3 புதிய நபர்கள் உறுதி..!

சீனா நாட்டிற்கான சிங்கப்பூர்த் தூதர் லியூ டக் யூ (Liu Tuck Yew) அந்தப் பொருள்களைச் சீன ராணுவத்தின் மருத்துவச் சேவைப் பிரிவுக்கான துணைத் தலைவரிடம் ஒப்படைத்தார்.

சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட், “சீனாவில் வைரஸால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாகும்’ என்று விளக்கியுள்ளார்.

மேலும், நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் சர்வதேச சமூகம் இந்த கொரோனா வைரஸின் சவாலை சமாளித்து மீண்டுவரும் என்று சிங்கப்பூர் நம்பிக்கை கொண்டுள்ளது என திரு ஹெங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சட்டவிரோதமாக வெளிநாட்டு தொழிலாளர்களை சிங்கப்பூருக்குள் அழைத்து வந்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு..!