உண்மையிலேயே அருமைங்க!! – சிங்கப்பூரின் பொதுப்போக்குவரத்துச் சேவை திருப்தி அளிப்பதாக மக்கள் கருத்து…

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்த பயணிகளின் மனதிருப்தி கூடியதாக பொதுப் போக்குவரத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, சுமார் 5029 பொதுப் போக்குவரத்து பயணிகளிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் 17இலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஒட்டுமொத்த 10 புள்ளிகளில் சராசரியாக 7.8 புள்ளிகளைப் பெற்றதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த விகிதம் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து நிலையாக உள்ளது.

மேலும், ஊனமுற்றோர்களுக்கான பொதுப் போக்குவரத்து ஆய்வில், 537 பங்கேற்றுள்ளனர். அதில் ஊனமுற்றோர், உடற்குறைபாடு உள்ளவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வில் 10 புள்ளிகளுக்கு சராசரியாக 7.6 புள்ளிகள் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை 021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, அது 0.4 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.