2023ன் இறுதி வாரங்களில் குறைந்து காணப்பட்ட மக்கள் நடமாட்டம் – எங்கே போனார்கள்?

singapore-quieter
Profession PHV Drivers Singapore:Grab, Gojek,Tada n Ryde & Shin Min Daily News

2023 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது கடந்த சில வாரங்களாக சிங்கப்பூர் மிகவும் அமைதியாக காணப்பட்டதாக மதர்ஷிப் கூறியுள்ளது.

நீங்களும் அவ்வாறு யோசிக்கிறீர்கள் என்றால், அது மாயத்தோற்றம் இல்லை. உண்மை தான்.

சிங்கப்பூரின் 2024-ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள்.. நீண்ட வார இறுதிகள் – என்ஜாய் ஊழியர்களே

பொதுப் போக்குவரத்து முதல் வணிக வளாகங்கள் வரை பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளி இடங்களும் இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மக்கள் அதிகம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்புகள் இல்லாததால், சிங்கப்பூரில் வசிக்கும் மக்கள் தங்களின் விடுமுறையை கொண்டாட கூட்டம் கூட்டமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என எண்ணுவதாக தனியார் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மதர்ஷிப்பிடம் கூறினார்.

டிசம்பர் 28 அன்றைய நிலவரப்படி, ஜூரோங் ஈஸ்ட், கிளெமெண்டி மற்றும் ஆங் மோ கியோவில் உள்ள சில்லறை வணிகர்கள் வியாபாரம் குறைவாக இருந்ததாகவும் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.

டிச.29 ஆம் தேதி கிட்டத்தட்ட இரவு 11 மணிக்கு, ஆர்ச்சர்ட் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததை ஒருவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

சிங்கப்பூருக்கு கனவுகளோடு வேலைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர்.. சடலமாக சென்ற பரிதாபம் – மரணம் குறித்து கேள்விகளை முன்வைக்கும் குடும்பத்தினர்