‘இம்மாத இறுதி வரை இடியுடன் கூடிய மழை’- வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

TODAY File Photo

 

சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் முழுவதும் இம்மாத இறுதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை, அடுத்த இரு வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நாட்களில், பிற்பகலில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் குறைவான நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், இப்பகுதியில் பெரிய அளவில் காற்று வீசுவதால் ஒரு சில நாட்களில் பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்யும். ஒரு சில நாட்களில் காலை நேரங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாக, இந்த மாதத்தின் மொத்த மழைப்பொழிவு தீவின் பெரும்பாலான பகுதிகளில் சராசரியை விட அதிகமாக இருக்கும்.

பிளாக் 695 ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை!

எதிர்பார்க்கப்பட்ட மழை இருந்தபோதிலும், தினசரி அதிகபட்ச வெப்பநிலை இன்னும் சில நாட்களில் 34 டிகிரி செல்சியஸை எட்டும். தினசரி வெப்ப நிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இரவு வேளைகளில், தட்பநிலை குறைந்தது 28 டிகிரி செல்சியஸாக இருக்கலாம். குறிப்பாக கிழக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதிகளில் இந்த நிலையை எதிர்பார்க்கலாம்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.