சிங்கப்பூரில் சட்டென்று எகிறிய கொரோனா பாதிப்பு… பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு!

Pic: Today

சிங்கப்பூரில் நேற்று (பிப்.22) மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக 26,032 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இது தான் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து ஆக அதிக தினசரி பாதிப்பு ஆகும்.

இந்நிலையில், அவசரநிலை தவிர்த்து தேவையில்லாமல் மருத்துவமனைகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு சுகாதார அமைச்சகம் (MOH) வலியுறுத்தி கூறியுள்ளது.

சிங்கப்பூரில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: புதிதாக 26,032 பேருக்கு தொற்றுநோய் உறுதி

தனியார் கிளினிக்குகளில் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில், பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்குகளின் (PHPC) இயங்கும் நேரம் பிப்ரவரி 25 முதல் மார்ச் 10 வரை நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகள் மட்டும் வார நாட்களில் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அதே போல வார இறுதி நாட்களில் இரவு 11 மணி வரையிலும் செயல்படும்.

அதோடு மட்டுமல்லாமல், அதே போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிகிளினிக்குகள் சனிக்கிழமை பிற்பகல் மற்றும் ஞாயிறு காலை வேளைகளிலும் செயல்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகள் மற்றும் இயங்கும் நேர விவரங்களின் பட்டியலை flu.gowhere.gov.sg இல் காணலாம்.

சிங்கப்பூர் சாலையில் காயம்பட்டு நடக்கமுடியாமல் தவித்த காட்டுப்பன்றி… “நான் இருக்கேன்!” என்று ஓடி உதவிய சூப்பர் மேன்!