தானம் செய்த ரத்தம் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்? – சிங்கப்பூரில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள ரத்த வகை

blood donation
சிங்கப்பூரில் கடந்த மாதம் ரத்த தானம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.பலரும் அந்த அழைப்பை ஏற்று ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.எனவே,தற்போது சிங்கப்பூரில் இரத்த இருப்பு ஓரளவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து அனைத்து ரத்த வகைகளும் கொடையாக பெறப்பட்டது.ரத்தம் வழங்கியவர்களில் 21 சதவீதத்தினர் முதல்முறையாக தானம் செய்தவர்கள்.
அவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தினர் இளைஞர்கள் ஆவர்.சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் கடந்த மாதம் ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தன.

 

‘A+’,’o+’ ஆகிய ரத்த வகைகள் தேவைப்படுவதாகவும் அவ்வகை ரத்தம் கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அப்போது அந்த ரத்த வகைகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அந்த ரத்த வகைகள் அதிகமாக பயன்படுத்தபடுவதாக கடந்த மாதம் கூறியது.

 

தானமாக அளிக்கப்பட்ட ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 6 வாரங்களுக்கும் ‘பிளேட்லைட்’ 7 நாட்களுக்கும் பிறருக்குச் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.
சிங்கப்பூரிலுள்ள நோயாளிகளுக்கு எப்போதும் குறையின்றி தேவையான ரத்தம் வழங்குவதை உறுதி செய்ய வருடத்திற்கு இரண்டு முறையேனும் ரத்த தானம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.