வெள்ளம், கடும் புயலால் பாதிக்கப்பட்ட இரு நாடுகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் US$100,000 நிவாரண உதவி

Malaysia flood
Ahmad Saifullah Sulong/via REUTERS

மலேசியா வெள்ளத்தாலும், பிலிப்பைன்ஸ் கடும் புயலாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் அந்த பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு US$100,000 (S$136,772) உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரி தள்ளுபடிகள் நீட்டிப்பு!!

மலேசிய செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தலா US$50,000 டாலர்களை தற்போதைய நிவாரணப் பணிகளுக்கு உதவியாக வழங்கப்படும் என்று சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஊடக வெளியீட்டில் அறிவித்தது.

உதவும் அமைப்பும் பொதுமக்களிடம் உதவி கோரி முறையீடுகளைத் தொடங்கியுள்ளது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்புக்கு நிதி திரட்டப்படுகிறது.

அவசரகால சுகாதார உதவி மற்றும் முதலுதவி, அத்துடன் தார்ப்பாய்கள், சூடான உணவுகள், உடைகள் மற்றும் போர்வைகள் போன்ற பொருட்களை நிவாரண மையங்களுக்கு விநியோகம் செய்தல் ஆகியவற்றிற்க்கு இந்த பணம் பயன்படுத்தப்படும்.

பற்றி எரிந்த தீ.. 2வது மாடியில் இருந்து குதித்த ஆடவர் – இவரை காப்பாற்ற வெளிநாட்டு ஊழியர் எடுத்த முயற்சிகள் வீண்