காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்.!

Singapore Red Cross Donation
Pic: @ajplus

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு உதவி செய்யும் விதமாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Singapore Red Cross) நிதிதிரட்டி வருகிறது.

காஸாவில் உள்ள மக்களுக்கு உதவ நன்கொடை அளிக்குமாறு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

காஸா மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள், உணவு, நிவாரணப் பொருட்கள் போன்றவற்றை வாங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் அடுக்குமாடி கட்டிடத்தின் விழும்பில் நின்ற ஆடவர் கைது.!

மேலும், துயர் துடைப்பு மையங்களில் தங்கும் பாலஸ்தீனர்களுக்கு இவை விநியோகிக்கப்படும் என்றும், இஸ்ரேல் உடனான மோதலில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சேவை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த சண்டை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
காஸாவில் மிக கடுமையான மோதல் நடந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

COVID-19: சிங்கப்பூரில் 18 பேர் சமூக அளவிலும், 3 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் பாதிப்பு