பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டும் சிங்கப்பூர்! – வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு தேவையான உடனடி உதவி

pakistan-floods-featured

பாகிஸ்தானில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே,ரஷ்யா-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க நிதி திரட்டிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் தற்போது பாகிஸ்தான் மக்களுக்காக பொது நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.சங்கத்தின் முயற்சிக்கு ஆதரவாக சிங்கப்பூர் அரசாங்கம் US$50,000 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய உதவிகளைச் செய்வதற்காக இந்த சங்கம் ஏற்கனவே $50,000 தொகையை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.ஜூன் மாதம் தொடங்கிய கனமழை காரணமாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

பலத்தமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 1,100க்கும் மேற்பட்ட மக்கள் மரணித்தனர்.பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.தற்போது 33 மில்லியனுக்கும் மேற்பட்டட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பல பகுதிகளில் பாலங்களும் சாலைகளும் சேதமடைந்து இருப்பதால் அதிகாரிகளால் உதவ முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த அவசர நிலையில் நீரினால் பரவும் நோய்கள் தலைதூக்கும் அபாயம் அதிகரித்து வருவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமை நிர்வாகி பெஞ்சமின் வில்லியம் அறிக்கையில் தெரிவித்தார்.