சிங்கப்பூரில் வீட்டு வாடகை கிடுகிடுவென உயர்வு….வெளிநாட்டு ஊழியர்கள் அதிர்ச்சி!

HDB Flat

சிங்கப்பூரில் வீட்டு வாடகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை தனியார் வீட்டு வாடகை 9.3% கூடியது. ஆண்டு அடிப்படையில் கடந்த 2022- ஆம் ஆண்டு வீட்டு வாடகை 29.7% அதிகரித்தது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் வீட்டு வாடகை 28.6% அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரர்கள் அதிகம் செல்ல விரும்பும் நாடுகள் எவை?- கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல்!

கடந்த பிப்ரவரி மாதம் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான குடியிருப்புகளின் வீட்டு வாடகை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அங் மோ கியோ அவென்யூ 10- ல் உள்ள ஐந்து அறை கொண்ட வீட்டின் வாடகை 6,500 வெள்ளி ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கெண்டன்மண்ட் சாலையில் உள்ள ஐந்து அறைகள் கொண்ட வீடுகளுக்கு மாத வாடகையாக 6,000 வெள்ளிக்கு மேல் வசூலிக்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, வெளிநாட்டு பயணிகள் வருகையால் சிங்கப்பூரில் வழக்கமான நிலைக்கு திரும்பியுள்ளது. வெளிநாட்டு ஊழியர்கள், மாணவர்கள் வருகையால் வீட்டு வாடகைக் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

லேப்டாப் சார்ஜருக்குள் தங்கத்தைக் கடத்தி வந்த பயணி… அதிகாரிகள் அதிர்ச்சி!

வீட்டு வாடகை உயர்ந்துள்ளதால், வெளிநாட்டு ஊழியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். வாங்கும் ஊதியத்தில் பாதி வீட்டு வாடகைக்கே சென்று விடுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.