சிங்கப்பூரில் விண்ணைத்தொடும் வாடகை – இதுவரை இல்லாத அளவுக்கு வாடகை அதிகரிப்பு

Pic: Ili Nadhirah Mansor/TODAY

சிங்கப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு பெரும்பாலான HDB வீடுகளின் வாடகை உயர்ந்துள்ளது.

குறிப்பிட்டு சொல்லப்போனால் இதுவரை காணாத அளவுக்கு பெரும்பாலான பகுதிகளில் வாடகை அதிகரித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

FIFA உலகக் கோப்பை: முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த Host நாடு என்ற வரலாற்றில் இடம்பெற்ற கத்தார்

50% வரை சில இடங்களில் வாடகை உயர்ந்துள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கோல், உட்லண்ட்ஸ் பகுதிகளில் வாடகை மிக அதிகமாக உள்ளது.

கொரோனா பரவலுக்கு முன்னர் சிங்கப்பூரில் வாடகை என்பது நிலையாக இருந்தது, அதாவது கடந்த 10 ஆண்டுகளில் நிலையான வாடகை இருந்தது.

ஆனால், அதற்கு பின்னர் வாடகை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.