சிங்கப்பூரில் தொற்று காரணமாக மேலும் 13 பேர் உயிரிழப்பு – 28 பேர் ICU பிரிவில்…

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் நேற்று மார்ச். 25 நிலவரப்படி, கொரோனா கிருமித்தொற்று காரணமாக மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

தொற்று தொடங்கியதிலிருந்து சிங்கப்பூரில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,239ஆக உள்ளது எனவும் MOH கூறியுள்ளது.

துவாஸ் வெடிப்பில் உயிரிழந்த 3 வெளிநாட்டு ஊழியர்கள்… விதிகள் மீறப்பட்டது தான் காரணம் – அறிக்கை

மருத்துவமனைகளில் உள்ளோர் விவரம்

அதே போல, மருத்துவமனையில் 826 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அது தெரிவித்தது.

மேலும், ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் 101 பேர் இருப்பதாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

ICU தீவிர அவசர சிகிச்சை பிரிவில் 28 பேர் உள்ளனர்.

தடுப்பூசி நிலவரம்

சிங்கப்பூரில் தகுதியுடைய 95 சதவீத பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

அதே போல், 71 சதவீத பேர் (மொத்த மக்கள் தொகையில்) பூஸ்டர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

பயனியர் சாலை நார்த்தில் லாரி கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் இருக்கையில் சிக்கியவர் (வீடியோ) மருத்துவமனையில் அனுமதி