Coronavirus: சிங்கப்பூரில் COVID-19 காரணமாக மூன்றாவது நபர் இறப்பு..!

Singapore reports third death from COVID-19
Singapore reports third death from COVID-19

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை இன்று (மார்ச் 29) மூன்றாவது நோயாளி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த கிருமித்தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் சமீபத்திய பயணம் மேற்கொள்ளாத 70 வயதான சிங்கப்பூரர், இன்று மதியம் 12.12 மணிக்கு உயிரிழந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு COVID-19 தொற்று உறுதி..!

இவர் கடந்த மாதம் பிப்ரவரி 29ஆம் தேதி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து மார்ச் 2ஆம் தேதி COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அன்றிலிருந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் MOH குறிப்பிட்டுள்ளது.

இது சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்றால் நேர்ந்த மூன்றாவது உயிரிழப்பு ஆகும்.

இவருக்கு ICUவில் 27 நாள்கள் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு தொற்று காரணமாக உயிரிழந்தார். மேலும், அவருக்கு ஏற்கனவே உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகம் இருந்ததாக அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவரின் குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை SGH வழங்கிவருவதாக அமைச்சகம் கூடுதலாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : வேண்டுமென்றே கட்டாய உத்தரவை மீறிய நபர்; பாஸ்போர்ட்டை ரத்து செய்தது ICA..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil