உணவங்காடியில் தள்ளுபடி சலுகை!! சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி இதுதான்…

சிங்கப்பூரில் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் உணவங்காடிக் கடைகள் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்ய புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்தாண்டு புது முயற்சியில் சுமார் 5 மில்லியன் உணவைக் குறைந்த விலையில் வழங்கவுள்ளது.

அதேசமயம், இந்த திட்டம் வயதானவர்களை டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்த ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறு செய்யும்போது அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.

மேலும் இது குறித்து பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் கூறுகையில், இந்த திட்டத்தின் இலக்கு, அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக டிஜிட்டல் முறையை மாற்றுவது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வாரமும் PayLah மூலம் பணத்தைச் செலுத்தும் 100,000 பேருக்கு உணவங்காடி நிலையங்களில் 3 வெள்ளி தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் DBS வங்கி வழங்கும் ஆதரவில் மொத்தம் 12,000 அங்காடிக் கடைகள் அந்தத் திட்டத்தில் பங்குபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.