சிங்கப்பூருக்கு வேலை அனுமதியில் வருபவர்களின் கவனத்திற்கு…

Singapore Resuming Entry Approvals
Pic: MOM

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எல்லைகளும் படிப்படியாக திறக்கப்பட இருப்பதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் (work pass holders and dependants) அனுமதி அளிக்கும் நடைமுறை ஆகஸ்ட் 10 முதல் தொடங்கும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் (WHO) அவசர பயன்பாட்டு பட்டியலிலுள்ள தடுப்பூசியை முழுமையாகத் போட்டுக்கொண்டால் மட்டுமே வேலை அனுமதி அட்டை மற்றும் அவர்களைச் சாரந்தவர்கள் சிங்கப்பூருக்கு நுழைய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் Maple Bear பாலர் பள்ளியில் தீடீர் தீ விபத்து.! (காணொளி)

சிங்கப்பூர் வந்தடைந்ததும் அவர்கள் இரண்டு வார காலம் தங்குமிடத்தில் கட்டாய தங்கும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். பின்னர், 2 வார காலம் தங்கும் உத்தரவு முடிவடைந்ததும், 2 வாரங்களுக்குள் தேசிய தடுப்பூசி பதிவேட்டில் (NIR) தடுப்பூசி ஆவணத்தை புதுப்பிக்க வேண்டும்.

தேசிய தடுப்பூசி பதிவேட்டில் புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் தான் சிங்கப்பூரில் பணிபுரிய செல்லுபடியாகும் தடுப்பூசி சான்றிதழ் ஆகும். சுகாதார அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்ட தனியார் சுகாதார வழங்குநர்களில் ஒருவரின் நேர்மறையான செரோலாஜி பரிசோதனை முடிவையும் மற்றும் வெளிநாட்டு தடுப்பூசி ஆவணத்தையும் NIR-ல் காட்டி புதுப்பிக்க வேண்டும்.

செரோலாஜி பரிசோதனை எடுக்க தவறினாலே அல்லது தடுப்பூசி ஆவணத்தை புதுப்பிக்க தவறினாலே அனுமதி சலுகைகள் நிறுத்தி வைக்கப்படலாம் என மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது.

வேலை அனுமதியில் சிங்கப்பூருக்கு வருபவர்கள் கூடுதல் தகவல்களை மனிதவள அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்.

பிரபல இரு விமான நிறுவனங்களுக்கு உயரிய ஐந்து நட்சத்திர பாதுகாப்புத் தர குறியீடு!