சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு திட்டம் யாருக்கு நன்மை? – முதலாளிகளுக்கா? தொழிலாளர்களுக்கா?

foreign worker jailed illegal money transfer
Photo: salary.sg Website
சிங்கப்பூரின் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் உள்ளூர் ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற இருக்கின்றனர்.உள்ளூர் தொழிலாளர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு ஆண்டுதோறும் 8.5 விழுக்காடு வரை ஊதிய உயர்வு கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துறையில் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்குச் சம்பள உயர்வு வழங்க முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறையின் கீழ் இது சாத்தியமாகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் அரசாங்கமும் ஊதிய உயர்வை வழங்கும்.சில்லறை விற்பனைத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை வழங்குவதால் முதலாளிகளுக்கு ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் உதவும்.
தொழிலாளர்கள் பணியில் முன்னேறுவதற்கு தெளிவான பாதையைச் சம்பள உயர்வு திட்டம் அளிக்கும் என்று அமைச்சர் இயோ கூறினார்.