சிங்கப்பூரில் இருந்து கோவை சென்ற ஊழியரை கடத்திய கும்பல்.. மடக்கிய போலீஸ் – விசாரணையில் உண்மை அம்பலம்

Singapore return worker kidnapping Coimbatore airport
Photo: Tamil Media

சிங்கப்பூரில் ஓட்டுநராக வேலைபார்த்து வரும் குணசேகரன் (39) திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர்.

இவர் சிங்கப்பூரில் இருந்து மனைவி மற்றும் மகளுடன் விமானம் மூலம் கோவைக்கு வந்துள்ளார். பின்னர் இவர்களை குணசேகரனின் அப்பா சண்முகம், அம்மா கலையரசி ஆகியோர் திருச்சிக்கு காரில் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இரு காரில் வந்த கும்பல் அவர்கள் சென்ற காரை வழிமறித்து, குணசேகரனை மட்டும் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர்.

சுமார் 770 ஊழியர்களுக்கு வேலை இல்லை… கலங்கும் ஊழியர்கள் – Singapore Turf Club

இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம் இது குறித்து போலீசுக்கு புகார் கொடுத்தார். இதனை அடுத்து சுதாரித்த போலீஸ் விஜயமங்கள் டோல்கேட் வந்த அந்த இரு காரையும் மடக்கி பிடித்தனர்.

அதில் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளியானது.

சிங்கப்பூரில் குணசேகரனுக்கு பழக்கமான நண்பர் ஒருவர் மூலமாக ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளார். 1 லட்ச பணம் மற்றும் விமான டிக்கெட் செலவை ஏற்பதாகவும், அதற்கு பகரமாக 500 கிராம் எடைகொண்ட தங்க நகையை கோவையில் உள்ள நண்பர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார் அவர்.

அதற்கு சம்மதம் தெரிவித்து அதனை வாங்கிக்கொண்டு சிங்கப்பூர் ஏர்போர்ட் வந்துள்ளார் குணசேகரன். பின்னர் பிளான் கேன்சல் என்றும் கூறி குணசேகரனிடம் நகையை மீண்டும் வாங்கிகொண்டுள்ளார் அந்த நபர்.

ஆனால், செலவுக்கு கொடுத்த பணத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அவர் குணசேகரனிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் கோவையில் தங்கத்தை வாங்க வந்த நபர்களிடம் பிளான் கேன்சல் செய்யப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

அதனால் குணசேகரன் தங்கத்தை கொடுக்காமல் செல்வதாக நினைத்த அந்த கும்பல் அவரை வளைத்துப்பிடித்து கடத்தியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதில் கார்த்திக், சாஜித் மற்றும் நஜ்முதீன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

ஆணிடம் தவறாக நடந்த இன்னொரு ஆடவர்… கேமரா உதவியுடன் கைது செய்த போலீஸ் – பிரம்படி கிடைக்கலாம்?