“19ம் நூற்றாண்டில் சிங்கப்பூர்..” – அழகிய வரலாற்றை சொல்லும் அஞ்சல் தலைகள்

historical images of the Singapore River
National Library Board

சிங்கப்பூர் ஆற்றின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக புதிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போஸ்ட் (SingPost) மற்றும் தேசிய நூலக வாரியம் (NLB) ஆகியவை அந்த அஞ்சல் தலை தொகுப்பை வெளியிட்டன.

“சிங்கப்பூரில் ஒன்றும் இல்லை.. அங்கு வாழ்க்கை நடத்த முடியாது..” என்று கூறிய சிங்கப்பூர் பெண் – கொதிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட பலர்

அதில் 19 ஆம் நூற்றாண்டின் சிங்கப்பூர் ஆற்றின் அரியவகை படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது தேசிய நூலகத்தின் அரிய பொருட்கள் சேகரிப்பில் இருந்து அவைகள் பெறப்பட்டுள்ளன.

புதிய அஞ்சல் தலைகள் S$0.80, S$0.90, S$1.15 மற்றும் S$1.50 ஆகிய மதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

நான்கு அஞ்சல் தலைகளின் தொகுப்பு S$4.35க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே சமயம் அஞ்சல் தலைகளுடன் ஒட்டப்பட்ட அட்டைகளின் விலை S$5.95 ஆகும்.

நான்கு அஞ்சல் தலைகளைக் கொண்ட Presentation packs S$7.05க்குக் கிடைக்கின்றன.

இந்த புதிய அஞ்சல் தலைகளை SingPost இன் அனைத்து கிளைகளிலும் வாங்கலாம்.

இல்லையெனில், SingPost இன் ஆன்லைன் ஸ்டோரிலிருந்தும் அவற்றை வாங்கலாம்.

சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு