ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகளை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பிய ஆயுதப்படை வீரர்கள்.!

Singapore RSAF humanitarian mission

சிங்கப்பூர் விமான படைக்கு சொந்தமான விமானப்படை A330 Multi-Role tanker Transport (MRTT) என்ற விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் நேற்று இரவு (செப்டம்பர் 10) சாங்கி ஆகாயப்படை விமான தளத்தில் தரையிறங்கினர்.

போக்குவரத்து நிறுவனங்களில் ஓட்டுனர்கள் தனிமை… பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்

அமெரிக்க படைகள் மேற்கொண்ட மீட்புப் பணிகளுக்கு உதவி செய்ய சிங்கப்பூர் ஆயுதப் படையினர் 77 பேரை சிங்கப்பூர் ஆகாயப்படை பணியமர்த்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தார் நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டோரை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல சிங்கப்பூரின் A330 MRTT ரக விமானம் பயன்படுத்தப்பட்டது.

கடந்த இரண்டு வாரங்களில், சுமார் 20,000-க்கும் மேற்பட்டோரை இடம் மாற்றும் பணியில் சிங்கப்பூர் ஆயுதப்படை உதவி செய்து வந்தது. இந்த பணிக்காக விமானிகள், சிப்பந்திகள், பொறியியலாளர்கள், ராணுவப் பாதுகாப்புப் படையினர் என 77 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

சிங்கப்பூரில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!