சிங்கப்பூரில் படிப்படியான சம்­பள உயர்வு முறை விரைவில் நடைமுறை செய்யப்படலாம்..!

Gradual salary rise
Photo: Reuters

சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை மற்றும் மறு­சு­ழற்­சி துறைகளில், விரைவில் படிப்படியான சம்­பள உயர்வு முறை நடைமுறை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை செயல்படுத்த தேவையான ஒரு முத்­த­ரப்­புக் குழுவை அமைப்பது குறித்து மனிதவள அமைச்சகத்திற்கு (MOM) பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!

கழிவு மேலாண்மை மற்றும் மறு­சு­ழற்­சி துறைகளில் இந்த படிப்படியான சம்­பள உயர்வு முறை எப்போது செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது என்று NTUC துணை தலைமை செயலாளர் ஸைனல் சப்­பாரி தெரிவித்துள்ளார்.

அவற்றை நடைமுறைப்படுத்த சிறுது காலம் எடுக்கலாம் என்றும் மேலும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அனைத்து துறைகளிலும் குறைந்­த­பட்ச ஊதி­ய­மாக S$1,300 வழங்க வழிவகை செய்யப்பட வேண்­டும் என்று பாட்டாளி கட்சி கடந்த வாரம் வலி­யு­றுத்­தி­ இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்­போது, இந்த சம்பள உயர்வு முறையில் 80,000 துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள் என 30% ஊதிய உயர்வு பெற்றுள்ளனர் என்று அர­சாங்­கம் குறிப்­பிட்­டது.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…