சிங்கப்பூரில் ஊழியர் மீது கிரேன் விழுந்து விபத்து..!

Singapore Worker crane fell
(Photo: GOOGLE MAPS)

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் வேலைபார்த்துக்கொண்டிருந்த கிரேன் விழுந்ததில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பிளாக் 828 யிஷுன் ஸ்ட்ரீட் 81க்கு அடுத்ததாக உள்ள ஒரு கார்பார்க்கில், மரக்கிளைகளை வெட்டும் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு லாரியுடன் இணைக்கப்பட்டிருந்த கிரேன் சுமார் நான்கு மாடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டது.

இதையும் படிங்க : SIA விமான உணவகங்களில் 400-க்கும் மேற்பட்டோர் உணவு அருந்தினர்..!

கிரேன் இறக்கப்பட்டாலும், அது மூன்று முதல் நான்கு மாடிகளுக்கு இடையில் இருந்தபோது கவிழத் தொடங்கியது என்று நீ சூன் டவுன் கவுன்சில் (Nee Soon Town Council) தெரிவித்துள்ளது.

இதில் கிரேன் தரையில் விழுந்தபோது அந்த ஊழியர் அதன் உள்ளே மாட்டிக்கொண்டார். அதனை தொடர்ந்து, மாலை 3.55 மணியளவில் விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நீ சூன் டவுன் கவுன்சில், ஊழியருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது என்றும் கூறியுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் ஊழியருக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் டவுன் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பலாம்.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…