சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

Photo: ISRO

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’ (ISRO), வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வரும் நிலையில், வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (Satish Dhawan Space Centre) முதல் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் டெலியோஸ்- 2 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி- சி55 (PSLV- C55) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.

அக்.14- ஆம் தேதி சிங்கப்பூரில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி!

இதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூருக்கு சொந்தமான டெலியோஸ்- 2 செயற்கைக்கோளானது புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

அதிரடியாக சோதனை செய்த அதிகாரிகள்…. 2,34,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

ஏற்கனவே, டெலியோஸ்- 1 செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி- சி29 ராக்கெட் மூலம் கடந்த 2015- ஆம் ஆண்டு டிசம்பர் 16- ஆம் தேதி அன்று விண்ணில் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.