சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி53 ராக்கெட்!

Photo: ISRO Official Twitter Page

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் (Satish Dhawan Space Centre) உள்ள இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி53 (PSLV-C53) ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று (30/06/2022) மாலை 06.02 மணிக்கு விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது.

சொந்த வீடு கனவா? – DBS வங்கி அதன் வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் டி.எஸ்- இஓ, ஸ்கூப்-1, நியூசார் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தி அசத்தியுள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். 365 கிலோ எடையுள்ள டி.எஸ்.- இஓ செயற்கைக்கோள் வண்ண புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது. நியூசார் செயற்கைக்கோள் அனைத்து பருவநிலைகளிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது.

சென்னை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- ஜூலை முதல் அக்டோபர் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

ராக்கெட் ஏவுவதை மக்கள் நேரடியாக காணும் வகையில் இஸ்ரோ சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. சிங்கப்பூரின் செயற்கைக்கோள்களை வணிக ரீதியில் இந்தியா அனுப்புகிறது. வெளிநாட்டு செயற்கைக்கோள்களை மட்டும் இந்தியா அனுப்புவது இது இரண்டாவது முறை ஆகும். 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பியுள்ளது என்பது குறிப்பிட்த்தக்கது.