சிங்கப்பூரில் அதிகரித்த 10 வகையான மோசடி.. காவல்துறை புள்ளிவிவரம்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில், 10 வகையான மோசடிகளில் சுமார் S$201 மில்லியனுக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில், மோசடி வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 15,700க்கும் அதிகமாக பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் உணவு பொருட்களை கொண்டுவந்த வெளிநாட்டு பயணி சிக்கினார்!

அதாவது, 2019ல் மொத்த மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 9,545ஆக இருந்தது, அது 65.1 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு 15,756ஆக உயர்ந்துள்ளது.

இந்த மோசடி வழக்குகள் ஒட்டுமொத்த குற்றங்களில் ஒப்பிடும்போது பெரிய விகிதத்தை உருவாக்கியுள்ளன, கடந்த ஆண்டு மட்டும் இது 42.1 சதவீதம் பதிவாகியுள்ளது. அது 2019ல் 27.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, COVID-19 சூழல் காரணமாக சிங்கப்பூரர்கள் அதிகமான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதால் ஆன்லைன் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக செய்திக்குறிப்பில் காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வெளிநாட்டு ஊழியர் கைது!

முதல் 10 மோசடிகளில், மின்-வர்த்தக மோசடிகள், சமூக ஊடக ஆள்மாறாட்டம் மோசடிகள், கடன் மோசடிகள் மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் ஆகியவை அதிக புகார்களை பெற்றுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதில் மின்-வர்த்தக மோசடிகள் முதல் இடத்தில் இருக்கின்றது, கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இது தொடர்பாக பதிவாகியுள்ளன.

அதே போல, முதலீட்டு மோசடிகள் குறித்து சுமார் 1,100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் கிட்டத்தட்ட S$70 மில்லியன் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இன உணர்வை தூண்டும் விதத்தில் தகவல்கள் அனுப்பிய கட்டுமான ஊழியருக்கு சிறை