துருக்கி, சிரியாவில் கடும் நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் மரணம் – சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்

துருக்கி, சிரியாவில் கடும் நிலநடுக்கம்: ஆயிரக்கணக்கானோர் மரணம் - சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கல்
AP/Khalil Hamra

கொடூரமான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து தவிக்கும் துருக்கி, சிரியா நாடுகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

கடுமையாக பாதிக்கப்பட்ட அந்நாடுகளுக்கு அனுதாபத்தை கடிதம் வழியாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அனுப்பினார்.

வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு தடை – MOM அதிரடி

குடும்ப உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும், காயமடைந்தவர்களுக்கு அவர் பிராத்தனை செய்தார்.

ரிக்டர் அளவுகோலில் 7.8 என பதிவான இந்த நிலநடுக்கம் மத்திய துர்கியேவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது இந்த நூற்றாண்டில் அந்நாட்டை தாக்கிய மிக மோசமான நில நடுக்கம் என சொல்லப்படுகிறது.

சான்லியுர்ஃபாவில் (Sanliurfa) இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள காஜியான்டெப் (Gaziantep) நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிங்கப்பூர் திரும்பும் சிங்கப்பூரர்கள் மற்றும் மற்ற குடியிருப்பாளர்களுக்கு இது தேவை –  பிப். 6 அப்டேட்!