சிங்கப்பூரில் மூத்த செய்தியாளர் எம்.கே.நாராயணன் காலமானார்!

Facebook Image

சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களின் ஒருவரும் ஒலி 96.8 வானொலி நிலையத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் ஊடகவியலாளருமான எம்.கே.நாராயணன், உடல்நலக்குறைவுக் காரணமாக மார்ச் 15- ஆம் தேதி அன்று காலமானார். அவருக்கு வயது 86.

திருப்பதியில் விபத்தில் இறந்த இருவரின் உடல் சிங்கப்பூர் வந்தது.. இறுதிச்சடங்கு எங்கு?

மார்ச் 16- ஆம் தேதி அன்று காலை 10.00 மணி முதல் லெண்டோர் கிரெசன்ட்டில் (Lentor Crescent) உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதைத் தொடர்ந்து, மார்ச் 17- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 04.15 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று எம்.கே.நாராயணனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மூத்த செய்தியாளர் எம்.கே.நாராயணன் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

1,000- க்கும் மேற்பட்ட நாடகங்கள், 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதம், ஒலிபரப்புத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் என சிங்கப்பூர் தமிழ் ஒலிபரப்பு வரலாற்றில் அசைக்க முடியாத சாதனையைப் படைத்தவர் எம்.கே.நாராயணன். இவருக்கு ‘நாடகக்கலை வித்தகர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$5.8 மில்லியன் ஹிமாலய பரிசை தட்டி சென்ற ஒரே ஒருவர்!

அதேபோல், எம்.கே.நாராயணன், 1980- களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரத்தை எழுதி இயக்கியுள்ளார். ஒலி 96.8 வானொலி நிலையத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.